சிவ-ராம-கிருஷ்ணன்: விரோதிகளின் மத்தியில்
தனி மனிதனாக நம்மால் நேர்மையாக நிமிர்ந்து நிற்க முடியும். ஆனால் சமூக வாழ்க்கைக்கு இது சாத்தியப்படாது. தீய சக்திகளை வெற்றிகொள்ள பற்பல உத்திகளைக் கையாள வேண்டும். நம்மால் கிருஷ்ணனிடத்தில் தொலைநோக்கும், புத்திசாலித்தனமும் மிளிர்வதைப் பல இடங்களில் காணமுடிகிறது. பாண்டவர்களிடத்தே நட்புபாராட்டுவதற்கு முன்பே, மாற்றத்திற்கான விதையை விதைத்துவிட்டான்.
