சிவ-ராம-கிருஷ்ணன்: சிவனின் குறியீடுகள்
சிவன் தனது ஒரு கையில் உடுக்கையை ஏந்தி நிற்கிறான். லயத்தின் தலைவன் லய வாத்தியம் வாசிக்கிறான். சமஸ்கிருதத்தின் அடிப்படை ஆதாரமான ‘மஹேஷ்வர-ஸூத்திரங்கள்’ சிவன் தனது உடுக்கையைத் தட்டுகையிலேயே ஏற்பட்டன என்று நம்பப்படுகிறது. சிவன் தனது உடுக்கையை ஒலிக்கச் செய்கையிலே, தமிழ் ஒரு பக்கமும் சமஸ்கிருதம் மற்றொரு பக்கமுமாக வெளிவந்தன என்ற அழகான ஒரு கருத்தினைத் தமிழர்கள் குறிப்பிடுவார்கள். உடுக்கையைக்கொண்டு சிவன் வெளியில் ஒலி எழுப்புகிறார், எனினும் அவர் உள்ளத்திலோ என்றும் அமைதி நிலவுகிறது – உண்மையில் சிவனது உடுக்கை ஒரு விசித்திரமான குறியீடாகும். கன்னட எழுத்தாளரான திரு டி. வி.
