சமஸ்கிருதம் கற்றலும் நம் கலாச்சாரத்தின் மதிப்பும் (பகுதி 2)
மேலும் தற்போதுள்ள நமது பண்டிதர்கள் புத்த மற்றும் ஜைன மத தத்துவங்களையும் கற்க முன்வர வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். வேதத்தை அடிப்படையாக கொள்ளாத இதுபோன்ற மதங்களை நான் கற்கச் சொல்வது புதுமைக்காக அல்ல. ஒரு காலத்தில் புறக்கோட்பாடுகளாக கருதப்பட்ட சாங்கியத்தையும் வைசேஷிகத்தையும் கூட நமது பண்டைய புலவர்கள் கற்றுத்தேர்ந்தனர். சங்கரர் முன்னதை போலி-பாரம்பரியக் கொள்கையெனவும், பின்னதை அறை-சூனியவாதம் என்றும் கருதிவந்தார்.[1] அப்படி இருந்தும்கூட, இவற்றை உன்னிப்பாக பயின்றனர்.
