சூத்திரங்களிலும், ஸ்மிருதிக்களிலும் உபநயனம்
அநேகமாக சூத்திர (Sūtra) காலத்தில்தான் உபநயனச் சடங்கு முழுதும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கக்கூடும்.[1] கிருஹ்ய சூத்திரங்களில் (gṛhya-sūtras) அச்சடங்கில் அரங்கேறும் பெரும்பாலான விவரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இதனில் கூறப்பட்டுள்ள சடங்கே பிற்கால தர்ம சூத்திரங்களிலும், ஸ்மிருதிக்களிலும் எவ்வித மாற்றமும் இன்றி இடம்பெற்றுள்ளன; இச்சடங்கின் சமூகக் கண்ணோட்டத்தை பரைசாற்றுவதே அவற்றின் முதன்மை நோக்காக அமைந்தது. அநேகமாக இக்காலகட்டத்தில்தான் முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உபநயனம் அவசியம் என்ற கருத்து ஏற்பட்டிருக்க வேண்டும்.