யக்ஞோபவீதம் (பூணூல்)
மேகலை அணிவித்தபின் அச்சிறுவனுக்கு பூணூல்(யக்ஞோபவீதம்) அணிவிக்கப்படுகிறது.[1] யக்ஞோபவீதம் என்பது பவித்திரமான பூணூல் என்று இப்போதை உள்ளதைப்போல அப்போதெல்லாம் கருதப்பட்டு வந்ததாகத் தெரியவில்லை[2], எனினும் பிற்காலங்களில் இதுவே உபநயன சடங்கில் கவனத்துக்குரிய பிரதான கட்டமானது.[3] பிற்காலங்களில் இளம் வடுவுக்குப் பூணூலை வழங்கி அவனை, "யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம்", என்கிற பிரபலமான வரியை உச்சரிக்கச் செய்தார்கள்.
