வேதங்களில் உபநயனம்

This article is part 6 of 15 in the series உபநயனம்

ஸம்ஹிதைகளில் உபநயனம்

கிருஹ்ய சூத்திரங்களில் குறிக்கப்படும் உபநயனத்துக்கான அம்சங்களை ரிக் வேத ஸம்ஹிதையிலேயே நம்மால் காண முடிகிறது.[1] பலி பீடமான  யூப ஸ்தம்பத்தை (yūpa-stambha) இளைஞனாகப் போற்றுகிறார்கள் – “மேகலை அணிந்து அழகாய் அலங்கரிக்கப்பட்ட பாலகன் இதோ வருகிறான் (மேகலை அணிந்த பாலகனை ரசானுபாவமாக யூப ஸ்தம்பத்தோடு இங்கே ஒப்பிடுகிறார்கள்); இப்பிறப்பால் உயர்நிலை அடைகிறான்; தேவதைகளை வணங்கி வழிபடும் ரிஷிகள், பெரும் மகிழ்ச்சிகொண்டு அவனை வளரச் செய்கின்றனர்.”[2]  

ஒரு ஆன்மீக மாணவனை குறிப்பதற்கு ‘பிரம்மசரிய’ (‘brahmacarya’) என்ற வார்த்தை ரிக் வேதத்திலே இரு முறை வருகின்றது.[3] மேலும், சற்றுமுன்னர் உபநயனமான ஒரு மாணவனைப் பற்றின குறிப்பும் இதில் உள்ளது.[4]

அதர்வ வேதத்தில் பிரம்மசாரி மற்றும் பிரம்மசரிய மார்க்கத்தை மிக உயர்வாகப் போற்றி ஒரு சூக்தமே இடம்பெற்றுள்ளது.[5] உபநயன சடங்கிற்கான பல விவரங்களை இங்கிருந்து நம்மால் பெற முடிகிறது. வேதம் பயில வந்த மாணவனை ‘பிரம்மசாரி’ என்றும், அவனது குருவை ‘ஆசாரியர்’ என்றும் அழைத்தனர். அந்த சூக்தத்தின் சாராம்சம் இதோ[6] – “தனது மகிமையால் ஒரு பிரம்மசாரி இரு உலகங்களிலும் சஞ்சரிக்கிறான்;அவன் சாதிப்பதற்கு ஏதுவாக கடவுளர்களும் அவனைக் காத்து ரக்ஷிக்கின்றனர்;குருவை தனது சிரத்தையால் பூரிக்கச் செய்கிறான்.”[7] மேலும், “ஒரு பிரம்மசாரியை கருவைப்போல அவனது குரு தன்னிடத்தே பேணுகிறார்,”[8] என்று கூறப்பட்டுள்ளது. இதற்கடுத்த வரியில், சொர்க்கமும் பூமியும் பிரம்மசாரியின் சமித்துக் கட்டைகள் எனவும், அவன் தனது  சமித்துக் கட்டைகள் மற்றும் மேகலை ஆகியவற்றை பயன்படுத்தி கடுமையாக தவம் புரிந்து, அதன்மூலம் இவ்வுலகை நிறையச் செய்கிறான் எனவும் கூறப்பட்டுள்ளது.[9] அவன் க்ஷவரம் செய்து கொள்ளாத முகத்துடன், கருத்த மான்தோல் அணிந்திருப்பான் என்று மேலும் இங்கு கூறப்பட்டுள்ளது. [10] பரந்த பூமியையும், ஆகாயத்தையும் பிச்சை எடுத்து முதன்முதலில் அந்த பிரம்மசாரி பெறுகிறான் எனக் கருதப்பட்டது.[11] மேலும் அவன் சமித்துக் கட்டைகளை அக்னியில் இடுகிறான் என்றும், அக்னி இல்லாத பட்சத்தில் அவைகளை சூரியன், சந்திரன், காற்று, அல்லது நீரில் இடுகிறான் என்றும் கூறப்பட்டுள்ளது.[12] “பிரம்மசாரி மற்றும் உபநயனம் பற்றின பல அம்சங்களை இந்த பத்திகளிலே நம்மால் காண முடிகிறது(அதாவது, அஜின (ajina), மேகலை (mekhalā), சமித்துக் கட்டைகளை காணிக்கை இடுவது, பிச்சை, கடின உழைப்பு, கட்டுப்பாடு போன்றவை)[13],” என டாக்டர் கானே அவர்கள் கூறுகிறார். ஒருவேளை ஸம்ஹிதை காலத்தைக் காட்டிலும் சூத்திர காலத்தில் சிறு வயதிலேயே ஒரு பாலகனுக்கு உபநயனம் நடைபெறும் வழக்கம் இருந்திருக்கலாம்.[14]

பிராஹ்மணங்களில் உபநயனம்

பிராஹ்மண காலத்தில் உபநயனம் என்பது ஒரு விஸ்தீரணமான சடங்காகவே அரங்கேறியது.[15] இதுவே பின்னர் தோன்றிய கிருஹ்ய சூத்திரங்களுக்கும் முன்மாதிரியாக அமைந்தது.[16]

பிரம்மசாரிகளின் வாழ்க்கை முறை பற்றின பல விவரங்கள் ஷதபத பிராஹ்மணத்தில் (Śatapatha-brāhmaṇa)[17] வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பின் வந்த கிருஹ்ய சூத்திரங்களிலும் இவை இடம்பெற்றுள்ளதை நம்மால் காண முடிகிறது.[18] அதன் சாராம்சம் இதோ – ஆசாரியரிடத்தில் ஒரு பாலகன் சென்று, “நான் பிரம்மசரிய விரதத்தை அனுஷ்டிக்க விரும்புகிறேன்” என்றும் “நான் பிரம்மசாரி ஆக வேண்டும்” என்றும் கேட்டுக் கொள்கிறான். அந்த ஆசாரியர் அவனை, “உன் பெயர் என்ன?”, என்று வினவுகிறார். அதன்பின் அவனை அவருக்கருகில் அழைக்கிறார் (upanayati). அவன் கரங்களைப் பற்றி, “நீ இந்திரனுக்கான பிரம்மசாரி;அக்னி உனது குரு, நான் உனது குரு[19], ராகவனே![20]” என்று கூறுகிறார். அதன்பின் அந்த மாணவனை பஞ்ச பூதங்களின் கட்டுப்பாட்டில் விடுகிறார். மேலும் அவனுக்கு, “நீர் அருந்து. குருவின் இல்லரத்தில் பணியாற்று, சமித்துக் கட்டைகளை அக்னியில் இடு. பகலில் உறங்காதே,” என்று கட்டளை இடுகிறார். சாவித்திரி மந்திரத்தை அவன் மீண்டும் ஓதுகிறான்.  அந்நாட்களில் பிரம்மசாரியாக அம்மாணவன் சேர்ந்து ஒரு வருடமானதும், அதன்பின் வந்த காலங்களில் ஆறு மாதம் நிறைவடைந்ததும், நாளடைவில் இருபத்து நான்கு நாட்கள்-பன்னிரண்டு நாட்கள்-மூன்று நாட்களானதும் இம்மந்திரம் ஓதப்பட்டு வந்தது; இருப்பினும் உபநயனம் ஆன தருவாயில் இம்மந்திரத்தை கட்டாயம் ஓத வேண்டும்; மந்திரத்தின் முதல் பாதத்தை அவனுக்கு அவன் குரு முதலில் போதிக்கிறார், அதன் பின் மந்திரத்தின் ஒரு பாதியையும், அதற்குப்பின் மந்திரத்தை முற்றிலுமாகவும் அவனுக்கு போதிக்கிறார்.[21] காயத்ரி மந்திரத்தை மாணவனுக்கு போதித்தபின் மூன்று நாட்களுக்கு அவனது குரு அகத்தூய்மையை கடைபிடிக்கிறார்.

மாணவனானதும் ஒரு பிரம்மசாரி அவனில் நான்கின் ஒரு பங்கை அக்னிக்கும், மரண தேவனுக்கும், ஆசாரியருக்கும், தனக்குமாக அர்ப்பணிக்கிறான்.[22] சமித்துக் கட்டைகளை அக்னிக்குக் காணிக்கை இடுவதன்மூலம் அந்த கட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறான்.[23] பிச்சை எடுப்பதன்மூலம் இரண்டாவதான மரண தேவனின் கட்டிலிருந்து விடுபடுகிறான்.[24] ஆசாரியரின் இல்லத்தில் பணியாற்றுவதன்மூலம் அக்கட்டிலிருந்து விடுபடுகிறான்.[25] தன்னிடமிருந்து அவை பறிக்கப்படலாம் என்றெண்ணி, ஒரு பிரம்மசாரி மாணவன் தனது குருவையும், அவரது இல்லத்தையும், அவரது கால்நடைகளையும் பாதுகாக்கிறான்.[26] ஸமாவர்த்தனம் ஆன ஒரு பிரம்மசாரி மாணவன், பிச்சை எடுப்பதை நிறுத்திவிடுகிறான்.[27]

உபநிஷத்துக்களில் உபநயனம்

உபநிஷத் காலத்தில் அநேகமாக நான்கு வித ஆஸ்ரமங்களும் நிறுவப்பட்டிருக்கலாம். அதனால் மாணவப் பருவத்துக்கான பிரம்மசரியமும் அவ்வந்தஸ்தை எட்டிவிட்டது. மிக உயரிய ஞானத்தைப் பெறுவதற்குமேகூட குருவின் அவசியம் உணரப்பட்டது.[28]   இக்காலகட்டத்தில்கூட உபநயனம் குருவிடம் சென்று ஒரு மாணவன் சேர்வதற்கான சடங்காகவே இருந்து வந்தது. ஆனால், அனைவருக்கும் இதை செய்து கொள்வதற்கு அனுமதி இல்லை. குருவின் ஒரு சில முன்நிபந்தனைகளை மாணவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். நம்பிக்கை அற்றோருக்கும், பொல்லாதவருக்கும், தீயவருக்கும் ஞானத்தை போதிக்கக் கூடாது என்று ஒரு பிரபல வரி ஒன்றுள்ளது.[29]

ஆனேகமாக அச்சமயத்தில் ஒரு பிரம்மசாரி தனது குருவின் இல்லரத்தில் இலவசமாகவே உண்டும்,வசித்தும் வந்திருக்கலாம்;[30] அதற்கு ஈடாக குருவுக்கு ஒத்தாசையாக அவரது தேவைகளை பூர்த்தி செய்வது, அவரது கால்நடைகளை பராமரிப்பது, உணவு வேண்டி பிச்சை எடுப்பது போன்ற சில வேலைகளை செய்து வந்திருப்பான்.[31] குரு மிகவும் மரியாதைக்குரியவர் ஆனார். குருவை பக்தி சிரத்தையோடு நடத்தும் மாணவனுக்கே மகோன்னதமான ஞானம் பெறும் தகுதி உள்ளது என்று கருதப்பட்டது.[32]

பொதுவாக பன்னிரண்டு வயதில் தொடங்கி இருபத்து நான்கு வயதுவரை ஒரு மாணவன் பயின்று வந்தான்.[33] இருப்பினும் அவரவரது ஆசைக்கும், திறமைக்கும் ஏற்ப இந்த வயது வரம்பு மாறுபடும். ஒவ்வொரு முறை ஒரு புதிய குருவை சென்றடையும்போதும் அம்மாணவனுக்கு உபநயனம் நடைபெறும்.[34] இதன்மூலம் அப்போது இச்சடங்கு எளிமையாகவே நடந்திருக்கக்கூடும் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது.

உபநிஷத்துக்களை படிக்கும்போது மாணவனாக சேர விரும்புபவன் குருவிடம் சமித்துக் கட்டைகளை எடுத்துச் செல்கிறான் என்பது புலப்படுகிறது. பிரம்மசரிய மார்க்கத்தை தனக்கு போதிக்குமாறு அவரிடத்தில் வேண்டிக் கொள்கிறான்.[35] குருவுக்கு தான் பணிவிடை செய்யத் தயாராக உள்ளதாக அவரிடம் கூறுகிறான்.[36] உபநயனத்தின்போது ஒரு சில சடங்குகள் அப்போதும் அரங்கேறின. கிருஹஸ்தர்களும் வேதம் பயில்விப்பவர்களுமான பிராசீனஷால ஔபமன்யவர் (Prācīnaśāla Aupamanyava) மற்றும் மேலும் நான்கு நபர்கள் சிறிய பாலகர்களைப் போல் கையில் எரிபொருளுடன் அஸ்வபதி கேகயரை (Aśvapati Kekaya) சென்றடைந்தபோது ‘அவர் (Aśvapati Kekaya) அவர்களுக்கு உபநயனம் செய்விக்காமலேயே பாடம் நடத்தத் துவங்குகிறார்.’[37] சத்யகாம ஜாபாலர் (Satyakāma Jābāla) தமது கோத்திரத்தைப் பற்றின உண்மை விவரங்களைக் கூறி கௌதம ஹாரித்ருமதரை (Gautama Hāridrumata) வணங்கியதும் அவர், “அன்புள்ள பாலகனே, சமித்துக் கட்டைகளை எடுத்து வா, நான் உனக்கு கல்வியைத் துவங்கி வைக்கிறேன்! நீ உண்மை பிறழாதவன்,” என்று கூறுகிறார்.[38]

இதற்கு முன்பான காலகட்டங்களில் எல்லாம் வெறும் வார்த்தைகளைக் கொண்டே குருவை வணங்கி மாணவர்கள் அவரிடம் சேர்ந்து கொண்டனர்(அதாவது, எவ்வித சடங்குகளும் அப்போதெல்லாம் நடைபெறவில்லை).[39] மிகவும் பழைய காலங்களில் ஒருவேளை தந்தையே அவரது மகனுக்குப் பயிற்சி அளித்திருக்கலாம்.[40] ஆனால் தைத்தரிய ஸம்ஹிதை (Taittirīya-saṃhitā) காலத்திலிருந்து, ஒரு மாணவன் குருவிடம் சேர்ந்து, அவரது இல்லத்திலேயே வசிக்கலானான். கைதேர்ந்த தத்துவவாதியான உத்தாலக ஆருணி (Uddālaka Āruṇi) தனது மகனான ஸ்வேதகேதுவை (Śvetaketu) குருவிடம் சென்று வேதம் பயிலுமாறு உபதேசிக்கிறார்.[41] சொல்லப்போனால், பிரம்மசரிய ஆஸ்ரமத்தைப் பின்பற்றுபவர் ‘குருவின் இல்லத்தில் பிரம்மசாரியாக வாழ்ந்து, தனது ஆயுள் முடியும்வரை உடல்வருந்த அங்கே பணியாற்ற வேண்டும்’ என்றுகூட கூறப்பட்டுள்ளது.[42]

உபநிஷத் காலத்தில் சீடனது கோத்திரத்தை குரு தெரிந்துகொண்டு அப்பெயரிலேயே அவனை அழைக்கிறார் எனத் தெரிய வருகிறது.[43] பொதுவாக ஒரு பிரம்மசாரி, உணவுக்காக பிச்சை எடுத்தும்[44], குரு வளர்க்கும் அக்னியை பராமரித்தும்[45], அவரது கால்நடைகளை பராமரித்தும்[46] வாழ்ந்து வந்தான்.

 

தொடரும்...

இக்கட்டுரை திரு ஹரி ரவிகுமாரது “Upanayana – A Gentle Introduction” என்கிற ஆங்கில கட்டுரைக்கான மொழிபெயர்ப்பு.

திரு பிரதீப் சக்ரவர்த்தி, ஷதாவதானி டாக்டர் ஆர் கணேஷ், டாக்டர் கோடி ஶ்ரீகிருஷ்ணா, திரு ஷஷி கிரன் பி என், மற்றும் திரு அர்ஜுன் பரத்வாஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

 

அடிக்குறிப்புகள்

[1] Yuvā suvāsāḥ parivīta āgāt sa u śreyān bhavati jāyamānaḥ. Taṃ dhīrāsaḥ kavaya unnayanti svādhyo manasā devayantaḥ. – Ṛgveda-saṃhitā 3.8.4. இவ்விடத்தில் ‘unnayanti’ க்கும் உபநயனத்துக்குமான வேர்ச்சொல் ஒன்றே.

Āśvalāyana-gṛhya-sūtra 1.19.8—‘Alaṅkṛtaṃ kumāraṃ...ahatena vāsasā saṃvītaṃ...’—பாலகன் புது ஆடை ஆபரணங்கள் அணிந்திருக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது

[2] HDS, பக்கம் 269

[3] Ṛgveda-saṃhitā 10.109.5

[4] Ṛgveda-saṃhitā 3.8.4-5

[5] Atharvaveda-saṃhitā 11.7.1-26

[6] HDS, பக்கம். 270

[7] Brahmacārīṣṇaṃścarati rodasī ubhe tasmin devāḥ saṃmanaso bhavanti. Sa dādhāra pṛthivīṃ divaṃ ca sa ācāryaṃ tapasā piparti.Atharvaveda-saṃhitā 11.7.1

[8] Ācārya upanayamāno brahmacāriṇaṃ kṛṇute garbham antaḥ. Taṃ rātrīstisra udare bibharti taṃ jātaṃ draṣṭum abhisaṃyanti devāḥ.Atharvaveda-saṃhitā 11.7.3

[9] Iyaṃ samit pṛthivī dyaurdvitīyotāntarikṣaṃ samidhā pṛṇāti. Brahmacārī samidhā mekhalayā śrameṇa lokāṃstapasā piparti.Atharvaveda-saṃhitā 11.7.4

[10] Brahmacāryeti samidhā samiddhaḥ kārṣṇaṃ vasāno dīkṣito dīrghaśmaśruḥ. Sa sadya eti pūrvasmāduttaraṃ samudraṃ lokāntsaṃgṛbhya muhurācarikrat. – Atharvaveda-saṃhitā 11.7.6

[11] Imāṃ bhūmiṃ pṛthivīṃ brahmacārī bhikṣām ā jabhāra prathamo divaṃ ca. Te kṛtvā samidhāvupāste tayorārpitā bhuvanāni viśvā.Atharvaveda-saṃhitā 11.5.9

[12] Agnau sūrye candramasi mātariśvan brahmacāryapsu samidham ā dadhāti. Tāsām arcīṃṣi pṛthagabhre caranti tāsām ājyaṃ puruṣo varṣam āpaḥ. – Atharvaveda-saṃhitā 11.7.13

[13] HDS, பக்கம் 270

[14] Ibid.

[15] Śatapatha-brāhmaṇa 1.2.1-8 யைக் காண்க

[16] உதாரணத்துக்கு, Pāraskara-gṛhya-sūtra 2.2.5வைப் பார்க்கவும்

[17] Śatapatha-brāhmaṇa 11.5.4.1-17

[18] HDS, பக்கம் 271

[19] இந்திரனை முதலாசானாகக் கருதினர்; ஒருவேளை இந்திரியங்களான கர்மேந்திரியங்களும் (கைகள், கால்கள், வாய், மல-ஜல துவாரங்கள்), ஞானேந்திரியங்களும் (கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு, தோல்) சரியான நிலையில் இருக்க வேண்டும் என்பதை இது குறிப்பதாகக் கொள்ளலாம். அக்னி அவனது இரண்டாம் ஆசான்; சிறுவன் தனது உணர்ச்சிகளை ஞானம் எனும் தீயில் இட வேண்டும் என்பதை குறிப்பதாகவும் இதனைக் கொள்ளலாம். அவனது குரு மூன்றாம் இடத்தையே பிடித்தார்.

[20]குரு மாணவனை அவன் பெயர்கொண்டு அழைக்கிறார்; இந்த கட்டுரையில் ராகவன் என்ற பெயரைப் பயன்படுத்தி இருக்கிறேன்.

[21] Brahmacaryamāgāmityāha... brahmacāryasānītyāha... Athainamāha ko nāmāsīti ...athāsya hastaṃ gṛhṇāti. Indrasya brahmacāryasi agnirācāryastavāhamācāryastavāsāviti. ...athainaṃ bhūtebhyaḥ paridadāti. ...adbhyastvauṣadhībhyaḥ paridadāmīti. ...apo’śā netyamṛtaṃ...karma kuru... samidhamādhehīti... mā śuṣupthā iti. ...athāsmai sāvitrīmanvāha. Tāṃ ha smaitāṃ purā saṃvatsare’nvāhuḥ... Atha ṣaṭsu māseṣu... Atha caturviṃśatyahe... Atha dvādaśāhe... Atha tryahe. ...tadapi ślokaṃ gāyanti. Ācāryo garbhī...brāhmaṇa iti. Sadyo ha tvāva brāhmaṇāyānubrūyādāgneyo vai brāhmaṇaḥ. ...tāṃ vai pacco’nvāha... athārdharcaśo... atha kṛtsnāmeko... Tadāhuḥ.Śatapatha-brāhmaṇa 11.5.4.1-17

[22] Caturdhā bhūtāni praviśati agnim padā mṛtyūm padācāryam padātmanyevāsya caturthaḥ pādaḥ pariśiṣyate.Śatapatha-brāhmaṇa 11.3.3.3

[23] Sa yadagnaye samidhamāharati ya evāsyāgnau pādastameva tena parikrīṇāti... – Śatapatha-brāhmaṇa 11.3.3.4

[24] Atha yadātmānaṃ daridrīkṛtyeva ahrīrbhūtvā bhikṣate ya evāsya mṛtyau pādastameva tena parikrīṇāti... – Śatapatha-brāhmaṇa 11.3.3.5

[25] Atha yadācāryavacasaṃ karoti yadācāryāya karma karoti ya evāsyācārye pādastameva tena parikrīṇāti...Śatapatha-brāhmaṇa 11.3.3.6

[26] Tasmādbrahmacāriṇa ācāryaṃ gopāyanti. Gṛhānpaśūnnenno’paharāniti. – Śatapatha-brāhmaṇa 3.6.2.15

[27] Gopatha-brāhmaṇa 2.3 மற்றும் Baudhāyana-dharma-sūtra 1.2.53

[28] Ācāryastu te gatiṃ vaktā...– Chāndogyopaniṣad 4.14.1

[29] Etadguhyatamaṃ nāputrāya nāśiṣyāya nāśāntāya kīrtayediti ananyabhaktāya sarvaguṇasampannāya dadyāt.Maitrāyaṇyupaniṣad 6.29

[30] ஒரு மாணவனை ‘ācāryakulavāsin’ என்றோ ‘antevāsin’ என்றோ அழைத்துவந்தனர் (Chāndogyopaniṣad 3.2.5, 4.10.1 ஆகியவற்றைக் காண்க)

[31] Chāndogyopaniṣad 4.3.5

[32] Yasya deve parā bhaktiryathā deve tathā gurau. Tasyaite kathitā hyarthāḥ prakāśante mahātmanaḥ prakāśante mahātmanaḥ. – Śvetāśvataropaniṣad 6.23

[33]Chāndogyopaniṣad 4.1.2; Chāndogyopaniṣad 2.23.1, 4.10.1, 6.1.2 ஆகியவற்றையும் காண்க

[34] Chāndogyopaniṣad 4.1.2

[35]Brahmacarya’ என்கிற வார்த்தை Kaṭhopaniṣad 1.1.15, Muṇḍakopaniṣad 2.1.7, Chāndogyopaniṣad 6.1.1 ஆகியவற்றிலும், இன்னும் பிற உபநிஷத்துக்களிலும் வருகின்றது

[36] Bṛhadāraṇyakopaniṣad 6.2.1; Chāndogyopaniṣad 5.6, 4.5.5, 5.11.7; Maitrāyaṇyupaniṣad 1.2.12 ஆகியவற்றைக் காண்க

[37] ...te ha samitpāṇayaḥ pūrvāhṇe praticakramire tānhānupanīyaivaitaduvācaChāndogyopaniṣad 5.11.7

[38] ...samidhaṃ somyāharopa tvā neṣye na satyādagā itiChāndogyopaniṣad 4.4.5

[39] Upaimyahaṃ bhavantamiti vācā ha smaiva pūrva upayanti sa hopāyanakīrtyovāsaBṛhadāraṇyakopaniṣad 6.2.7

[40] Bṛhadāraṇyakopaniṣad 6.2.1 யைக் காண்க – ‘Anuśiṣṭonvasi pitretyomiti hovāca.’ Yājñavalkyasmṛti 1.15 பற்றின வர்ணனையில் Viśvarūpa, ‘Gurugrahaṇaṃ tu mukhyaṃ piturupanetṛtvamiti. Tathā ca śrutiḥ. Tasmātputramanuśiṣṭaṃ lokasyamāhuriti. Ācāryopanayanaṃ tu brāhmaṇasyānukalpaḥ’ என்கிறார்

[41] Śvetaketurhāruṇeya āsa taṃ ha pitovāca śvetaketo vasa brahmacaryaṃ... Sa ha dvādaśa varṣa upetya caturviṃśativarṣaḥ sarvānvedānadhītya mahāmanā anūcānamānī stabdha eyāya taṃ ha pitovāca. Śvetaketo... uta tamādeśamaprākṣyaḥ yenāśrutaṃ śrutaṃ bhavati.Chāndogyopaniṣad 6.1.1-3

[42] Chāndogyopaniṣad 2.23.1. இது naiṣṭikabrahmacārin யைக் குறிக்கிறது

[43] ...hovāca kiṃgotro nu somyāsīti...Chāndogyopaniṣad 4.4.4

[44] Chāndogyopaniṣad 4.3.5

[45] Chāndogyopaniṣad 4.10.1-2

[46] Chāndogyopaniṣad 4.4.5

Author(s)

About:

Hari is an author, translator, editor, designer, and violinist with a deep interest in philosophy, education pedagogy, literature, and films. He has (co-)written/translated and (co-)edited some forty books, mostly related to Indian culture.

Translator(s)

About:

Sripriya Srinivasan is a Computer Science Engineer with a deep interest in literature, philosophy, science, and translation. She has translated two books into Tamil: Dr. A P J Abdul Kalam and Dr. Y. S. Rajan’s'Scientific Indian' (as கலாமின் இந்தியக் கனவுகள்) as well as 'The New Bhagavad-Gita' by Koti Sreekrishna and Hari Ravikumar (as பகவத்கீதை தற்காலத் தமிழில்). Tamil being her mother tongue, she hopes to contribute to its literature.

Prekshaa Publications

Indian Perspective of Truth and Beauty in Homer’s Epics is a unique work on the comparative study of the Greek Epics Iliad and Odyssey with the Indian Epics – Rāmāyaṇa and Mahābhārata. Homer, who laid the foundations for the classical tradition of the West, occupies a stature similar to that occupied by the seer-poets Vālmīki and Vyāsa, who are synonymous with the Indian culture. The author...

Karnataka’s celebrated polymath, D V Gundappa brings together in the sixth volume of reminiscences character sketches of prominent public figures, liberals, and social workers. These remarkable personages hailing from different corners of South India are from a period that spans from the late nineteenth century to the mid-twentieth century. Written in Kannada in the 1970s, these memoirs go...

An Introduction to Hinduism based on Primary Sources

Authors: Śatāvadhānī Dr. R Ganesh, Hari Ravikumar

What is the philosophical basis for Sanātana-dharma, the ancient Indian way of life? What makes it the most inclusive and natural of all religio-philosophical systems in the world?

The Essential Sanātana-dharma serves as a handbook for anyone who wishes to grasp the...

Karnataka’s celebrated polymath, D V Gundappa brings together in the fifth volume, episodes from the lives of traditional savants responsible for upholding the Vedic culture. These memorable characters lived a life of opulence amidst poverty— theirs  was the wealth of the soul, far beyond money and gold. These vidvāns hailed from different corners of the erstwhile Mysore Kingdom and lived in...

Padma Bhushan Dr. Padma Subrahmanyam represents the quintessence of Sage Bharata’s art and Bhārata, the country that gave birth to the peerless seer of the Nāṭya-veda. Padma’s erudition in various streams of Indic knowledge, mastery over many classical arts, deep understanding of the nuances of Indian culture, creative genius, and sublime vision bolstered by the vedāntic and nationalistic...

Bhārata has been a land of plenty in many ways. We have had a timeless tradition of the twofold principle of Brāhma (spirit of wisdom) and Kṣāttra (spirit of valour) nourishing and protecting this sacred land. The Hindu civilisation, rooted in Sanātana-dharma, has constantly been enriched by brāhma and safeguarded by kṣāttra.
The renowned Sanskrit poet and scholar, Śatāvadhānī Dr. R...

ಛಂದೋವಿವೇಕವು ವರ್ಣವೃತ್ತ, ಮಾತ್ರಾಜಾತಿ ಮತ್ತು ಕರ್ಷಣಜಾತಿ ಎಂದು ವಿಭಕ್ತವಾದ ಎಲ್ಲ ಬಗೆಯ ಛಂದಸ್ಸುಗಳನ್ನೂ ವಿವೇಚಿಸುವ ಪ್ರಬಂಧಗಳ ಸಂಕಲನ. ಲೇಖಕರ ದೀರ್ಘಕಾಲಿಕ ಆಲೋಚನೆಯ ಸಾರವನ್ನು ಒಳಗೊಂಡ ಈ ಹೊತ್ತಗೆ ಪ್ರಧಾನವಾಗಿ ಛಂದಸ್ಸಿನ ಸೌಂದರ್ಯವನ್ನು ಲಕ್ಷಿಸುತ್ತದೆ. ತೌಲನಿಕ ವಿಶ್ಲೇಷಣೆ ಮತ್ತು ಅಂತಃಶಾಸ್ತ್ರೀಯ ಅಧ್ಯಯನಗಳ ತೆಕ್ಕೆಗೆ ಬರುವ ಬರೆಹಗಳೂ ಇಲ್ಲಿವೆ. ಶಾಸ್ತ್ರಕಾರನಿಗಲ್ಲದೆ ಸಿದ್ಧಹಸ್ತನಾದ ಕವಿಗೆ ಮಾತ್ರ ಸ್ಫುರಿಸಬಲ್ಲ ಎಷ್ಟೋ ಹೊಳಹುಗಳು ಕೃತಿಯ ಮೌಲಿಕತೆಯನ್ನು ಹೆಚ್ಚಿಸಿವೆ. ಈ...

Karnataka’s celebrated polymath, D V Gundappa brings together in the fourth volume, some character sketches of the Dewans of Mysore preceded by an account of the political framework of the State before Independence and followed by a review of the political conditions of the State after 1940. These remarkable leaders of Mysore lived in a period that spans from the mid-nineteenth century to the...

Bharatiya Kavya-mimamseya Hinnele is a monograph on Indian Aesthetics by Mahamahopadhyaya N. Ranganatha Sharma. The book discusses the history and significance of concepts pivotal to Indian literary theory. It is equally useful to the learned and the laity.

Sahitya-samhite is a collection of literary essays in Kannada. The book discusses aestheticians such as Ananda-vardhana and Rajashekhara; Sanskrit scholars such as Mena Ramakrishna Bhat, Sridhar Bhaskar Varnekar and K S Arjunwadkar; and Kannada litterateurs such as DVG, S L Bhyrappa and S R Ramaswamy. It has a foreword by Shatavadhani Dr. R Ganesh.

The Mahābhārata is the greatest epic in the world both in magnitude and profundity. A veritable cultural compendium of Bhārata-varṣa, it is a product of the creative genius of Maharṣi Kṛṣṇa-dvaipāyana Vyāsa. The epic captures the experiential wisdom of our civilization and all subsequent literary, artistic, and philosophical creations are indebted to it. To read the Mahābhārata is to...

Shiva Rama Krishna

சிவன். ராமன். கிருஷ்ணன்.
இந்திய பாரம்பரியத்தின் முப்பெரும் கதாநாயகர்கள்.
உயர் இந்தியாவில் தலைமுறைகள் பல கடந்தும் கடவுளர்களாக போற்றப்பட்டு வழிகாட்டிகளாக விளங்குபவர்கள்.
மனித ஒற்றுமை நூற்றாண்டுகால பரிணாம வளர்ச்சியின் பரிமாணம்.
தனிநபர்களாகவும், குடும்ப உறுப்பினர்களாகவும், சமுதாய பிரஜைகளாகவும் நாம் அனைவரும் பரிமளிக்கிறோம்.
சிவன் தனிமனித அடையாளமாக அமைகிறான்....

ऋतुभिः सह कवयः सदैव सम्बद्धाः। विशिष्य संस्कृतकवयः। यथा हि ऋतवः प्रतिसंवत्सरं प्रतिनवतामावहन्ति मानवेषु तथैव ऋतुवर्णनान्यपि काव्यरसिकेषु कामपि विच्छित्तिमातन्वते। ऋतुकल्याणं हि सत्यमिदमेव हृदि कृत्वा प्रवृत्तम्। नगरजीवनस्य यान्त्रिकतां मान्त्रिकतां च ध्वनदिदं चम्पूकाव्यं गद्यपद्यमिश्रितमिति सुव्यक्तमेव। ऐदम्पूर्वतया प्रायः पुरीपरिसरप्रसृतानाम् ऋतूनां विलासोऽत्र प्रपञ्चितः। बेङ्गलूरुनामके...

The Art and Science of Avadhānam in Sanskrit is a definitive work on Sāhityāvadhānam, a form of Indian classical art based on multitasking, lateral thinking, and extempore versification. Dotted throughout with tasteful examples, it expounds in great detail on the theory and practice of this unique performing art. It is as much a handbook of performance as it is an anthology of well-turned...

This anthology is a revised edition of the author's 1978 classic. This series of essays, containing his original research in various fields, throws light on the socio-cultural landscape of Tamil Nadu spanning several centuries. These compelling episodes will appeal to scholars and laymen alike.
“When superstitious mediaevalists mislead the country about its judicial past, we have to...

The cultural history of a nation, unlike the customary mainstream history, has a larger time-frame and encompasses the timeless ethos of a society undergirding the course of events and vicissitudes. A major key to the understanding of a society’s unique character is an appreciation of the far-reaching contributions by outstanding personalities of certain periods – especially in the realms of...

Prekṣaṇīyam is an anthology of essays on Indian classical dance and theatre authored by multifaceted scholar and creative genius, Śatāvadhānī Dr. R Ganesh. As a master of śāstra, a performing artiste (of the ancient art of Avadhānam), and a cultured rasika, he brings a unique, holistic perspective to every discussion. These essays deal with the philosophy, history, aesthetics, and practice of...

Yaugandharam

इदं किञ्चिद्यामलं काव्यं द्वयोः खण्डकाव्ययोः सङ्कलनरूपम्। रामानुरागानलं हि सीतापरित्यागाल्लक्ष्मणवियोगाच्च श्रीरामेणानुभूतं हृदयसङ्क्षोभं वर्णयति । वात्सल्यगोपालकं तु कदाचिद्भानूपरागसमये घटितं यशोदाश्रीकृष्णयोर्मेलनं वर्णयति । इदम्प्रथमतया संस्कृतसाहित्ये सम्पूर्णं काव्यं...

Vanitakavitotsavah

इदं खण्डकाव्यमान्तं मालिनीछन्दसोपनिबद्धं विलसति। मेनकाविश्वामित्रयोः समागमः, तत्फलतया शकुन्तलाया जननम्, मातापितृभ्यां त्यक्तस्य शिशोः कण्वमहर्षिणा परिपालनं चेति काव्यस्यास्येतिवृत्तसङ्क्षेपः।

Vaiphalyaphalam

इदं खण्डकाव्यमान्तं मालिनीछन्दसोपनिबद्धं विलसति। मेनकाविश्वामित्रयोः समागमः, तत्फलतया शकुन्तलाया जननम्, मातापितृभ्यां त्यक्तस्य शिशोः कण्वमहर्षिणा परिपालनं चेति काव्यस्यास्येतिवृत्तसङ्क्षेपः।

Nipunapraghunakam

इयं रचना दशसु रूपकेष्वन्यतमस्य भाणस्य निदर्शनतामुपैति। एकाङ्करूपकेऽस्मिन् शेखरकनामा चित्रोद्यमलेखकः केनापि हेतुना वियोगम् अनुभवतोश्चित्रलेखामिलिन्दकयोः समागमं सिसाधयिषुः कथामाकाशभाषणरूपेण निर्वहति।

Bharavatarastavah

अस्मिन् स्तोत्रकाव्ये भगवन्तं शिवं कविरभिष्टौति। वसन्ततिलकयोपनिबद्धस्य काव्यस्यास्य कविकृतम् उल्लाघनाभिधं व्याख्यानं च वर्तते।

Karnataka’s celebrated polymath, D V Gundappa brings together in the third volume, some character sketches of great literary savants responsible for Kannada renaissance during the first half of the twentieth century. These remarkable...

Karnataka’s celebrated polymath, D V Gundappa brings together in the second volume, episodes from the lives of remarkable exponents of classical music and dance, traditional storytellers, thespians, and connoisseurs; as well as his...

Karnataka’s celebrated polymath, D V Gundappa brings together in the first volume, episodes from the lives of great writers, poets, literary aficionados, exemplars of public life, literary scholars, noble-hearted common folk, advocates...

Evolution of Mahabharata and Other Writings on the Epic is the English translation of S R Ramaswamy's 1972 Kannada classic 'Mahabharatada Belavanige' along with seven of his essays on the great epic. It tells the riveting...

Shiva-Rama-Krishna is an English adaptation of Śatāvadhāni Dr. R Ganesh's popular lecture series on the three great...

Bharatilochana

ಮಹಾಮಾಹೇಶ್ವರ ಅಭಿನವಗುಪ್ತ ಜಗತ್ತಿನ ವಿದ್ಯಾವಲಯದಲ್ಲಿ ಮರೆಯಲಾಗದ ಹೆಸರು. ಮುಖ್ಯವಾಗಿ ಶೈವದರ್ಶನ ಮತ್ತು ಸೌಂದರ್ಯಮೀಮಾಂಸೆಗಳ ಪರಮಾಚಾರ್ಯನಾಗಿ  ಸಾವಿರ ವರ್ಷಗಳಿಂದ ಇವನು ಜ್ಞಾನಪ್ರಪಂಚವನ್ನು ಪ್ರಭಾವಿಸುತ್ತಲೇ ಇದ್ದಾನೆ. ಭರತಮುನಿಯ ನಾಟ್ಯಶಾಸ್ತ್ರವನ್ನು ಅರ್ಥಮಾಡಿಕೊಳ್ಳಲು ಇವನೊಬ್ಬನೇ ನಮಗಿರುವ ಆಲಂಬನ. ಇದೇ ರೀತಿ ರಸಧ್ವನಿಸಿದ್ಧಾಂತವನ್ನು...

Vagarthavismayasvadah

“वागर्थविस्मयास्वादः” प्रमुखतया साहित्यशास्त्रतत्त्वानि विमृशति । अत्र सौन्दर्यर्यशास्त्रीयमूलतत्त्वानि यथा रस-ध्वनि-वक्रता-औचित्यादीनि सुनिपुणं परामृष्टानि प्रतिनवे चिकित्सकप्रज्ञाप्रकाशे। तदन्तर एव संस्कृतवाङ्मयस्य सामर्थ्यसमाविष्कारोऽपि विहितः। क्वचिदिव च्छन्दोमीमांसा च...

The Best of Hiriyanna

The Best of Hiriyanna is a collection of forty-eight essays by Prof. M. Hiriyanna that sheds new light on Sanskrit Literature, Indian...

Stories Behind Verses

Stories Behind Verses is a remarkable collection of over a hundred anecdotes, each of which captures a story behind the composition of a Sanskrit verse. Collected over several years from...